விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்,
ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உடனடியாக 50 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டே கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் நகரச் செயலாளர் முரளி, மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், வக்கீல் அணி மாநில துணை செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தாந்தோன்றிமலை பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட செய்தி தொடர்பாளர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story