தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 1:09 AM GMT (Updated: 2020-10-29T06:39:57+05:30)

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சசிகலா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், வட்டார செயலாளர்கள் மோகன், தேவகி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பணி நியமன வயது 40 ஆக குறைக்கப்பட்டது, ஊக்க ஊதிய உயர்வு, ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டம் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story