அரியலூரில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவற்றின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, உணவு பொருள் பாதுகாப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளுக்கு, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், உணவகங்களில் உள்ள உணவுகள் தரம் குறித்து ஆய்வு செய்யவும், ஜெயங்கொண்டம் செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா பூங்காவினை சீரமைக்கவும், மளிகை கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிசந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், நுகர்வோர் சங்க அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story