ரெயில்வே பதிலில் அரசு அதிருப்தி: மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பதில் அரசியல் வேண்டாம் - உள்துறை மந்திரி வலியுறுத்தல்


ரெயில்வே பதிலில் அரசு அதிருப்தி: மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பதில் அரசியல் வேண்டாம் - உள்துறை மந்திரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Oct 2020 4:00 AM IST (Updated: 31 Oct 2020 1:23 AM IST)
t-max-icont-min-icon

மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பதில் அரசியல் வேண்டாம் என்று ரெயி்ல்வேக்கு உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

மும்பை புறநகர் மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் பொதுமக்களையும் அனுமதிக்குமாறு கடந்த புதன்கிழமை மாநில அரசு, ரெயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது. மாநில அரசின் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிப்பதாக ரெயில்வே நிர்வாகம் கூறியது.

இந்தநிலையில் சமூக இடைவெளி, அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு சுமார் 22 லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. வழக்கமாக மும்பையில் மின்சார ரெயில்களில் தினமும் 85 லட்சம் பேர் பயணம் செய்வர். ரெயில்வேயின் இந்த பதிலால் அரசு அதிருப்தி அடைந்து உள்ளது.

இந்தநிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என ரெயில்வே நிர்வாகத்திற்கு உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மின்சார ரெயில்களில் பொதுமக்களை எந்த நேரத்தில் அனுமதிக்க வேண்டும் என மாநில அரசு கூறிவிட்டது. இந்த விவகாரத்தில் மராட்டிய அரசுக்கு ரெயில்வே நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகம் ஒத்துழைத்தால் மக்கள் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. இந்த விவகாரத்தில் அரசியலை நுழைக்காமல் ரெயில்வே நிர்வாகம் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story