ஜல்னாவில் பயங்கரம்: டிராக்டரை ஏற்றி பெண், கள்ளக்காதலன் கொலை மாமனார், மைத்துனர் கைது
ஜல்னாவில் டிராக்டரை ஏற்றி பெண், கள்ளக்காதலனை கொலை செய்ததாக மாமனார், மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
ஜல்னா,
ஜால்னா மாவட்டம் கான்சுவாங்கி தாலுகா சப்பல்காவ் பகுதியை சேர்ந்தவர் மரியா (வயது32). இவரது கணவர் 10 ஆண்டுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் மரியா தனது மாமனார் சம்பத் லால்ஜரே மற்றும் மைத்துனர் விகாஸ் ஆகியோருடன் வசித்து வந்தார்.
விதவையான மரியாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஹர்பக் பகவத்(27) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அடிக் கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதுபற்றி அறிந்த மாமனார் சம்பத் லால்ஜரே, அவரது மகன் விகாஸ் ஆகியோர் இருவரையும் கண்டித்தனர். இந்தநிலையில் அவர் கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஹர்பக் பகவத், அம்பாட் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி ஹர்பக் பகவத்தும், மரியாவும் குஜராத் மாநிலத்திற்கு சென்றனர். இதனால் மரியாவை கடத்தி சென்றதாக ஹர்பக் பகவத் மீது அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி குஜராத்தில் பதுங்கி இருந்த ஹர்பக் பகவத், மரியாவை மீட்டு வந்தனர்.
அதன்பிறகு இருவரும் அதே கிராமத்தில் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்தனர். இதனால் அவர்கள் மீது சம்பத் லால்ஜரே, விகாஸ் ஆகியோர் ஆத்திரத்தில் இருந்தனர்.
இதற்கிடையில் கடந்த 28-ந் தேதி மரியாவுடன் ஹர்பக் பகவத் தனது மோட்டார் சைக்கிளில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார். அப்போது வழியில் டிராக்டர் ஓட்டி வந்த விகாஸ் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு மரியா, ஹர்பக் பகவத் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அம்பாட் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். டிராக்டரை ஏற்றி கொலை செய்த விகாஸ் மற்றும் கொலையில் தொடர்புடைய சம்பத் லால்ஜரேவை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story