தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் அறவழிப் போராட்டம்
தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் அறவழிப் போராட்டம் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரிக்கை.
தஞ்சாவூர்,
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்றுகாலை அறவழிப்போராட்டம் நடந்தது. இதற்கு மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி..வரதராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய புதிய வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
சமூக நீதியை காக்க நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து விவசாயிகளை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் குணசேகரன், மாநகர மாவட்ட செயலாளர் கோவி.மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினம் மற்றும் சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்த தினத்தையொட்டி அவர்களது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story