அயர்லாந்து நாட்டில் சம்பவம்: கள்ளக்காதலை கண்டித்த மைசூரு பெண், மகன்-மகள் படுகொலை - கணவனே கொன்றாரா? போலீஸ் விசாரணை
அயர்லாந்து நாட்டில், கள்ளக்காதலை கண்டித்த மைசூரு பெண்ணையும், அவரது மகன் மற்றும் மகளையும் யாரோ கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். அந்த பெண்ணையும், குழந்தைகளையும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான கணவனே கொன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மைசூரு,
மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா ஹலகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கப்பார். இவரது மகள் சீமா பானு(வயது 37). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கும், மைசூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்த சமீர் என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் சமீருக்கு பதவி உயர்வு கிடைத்தது. மேலும் அவர் துபாயில் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து சமீர் தனது மனைவியுடன் துபாயில் குடியேறினார். அங்கு அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் பிறந்தனர். மகள் அப்ரியாவுக்கு தற்போது 11 வயது ஆகிறது. மகன் பஜானுக்கு 6 வயது ஆகிறது. இந்த நிலையில் சமீருக்கு கடந்த பிப்ரவரி மாதம் அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது. அதன்பேரில் அவர் தனது மனைவி சீமா பானு, மகள் அப்ரியா, மகன் பஜான் ஆகியோருடன் அயர்லாந்து நாட்டுக்கு சென்றார். அயர்லாந்து நாட்டில் தெற்கு டப்ளின் நகரில் பேலண்டீர் லெவலின் என்ற எஸ்டேட்டில் உள்ள ஒரு வீட்டில் சமீர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறினார்.
அயர்லாந்து நாட்டுக்கு சென்றதும் சீமா பானு வேலைக்கு செல்லாமல் வீட்டையும், பிள்ளைகளையும் கவனித்து வந்தார். மேலும் அவர் அக்கம்பக்கத்தினரிடம் சகஜமாக பழகி வந்தார். சமீர் வழக்கம்போல் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சமீருக்கு, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர் அடிக்கடி தனது கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதுபற்றி சீமா பானுவுக்கு தெரியவந்தது.
கொதித்தெழுந்த அவர் தனது கணவன் சமீரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி கண்டித்தார். ஆனால் சமீர் கேட்கவில்லை. அவர் தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். மேலும் மனைவி சீமா பானுவையும் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார்.
இதனால் தன்னை தனது கணவர் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்துவதாக சீமா பானு அயர்லாந்து நாட்டு போலீசில் புகார் செய்தார். மேலும் கோர்ட்டிலும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே சீமா பானுவை அடித்து, உதைத்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சமீர் குற்றவாளி என்று அயர்லாந்து நாட்டு கோர்ட்டு அறிவித்தது. இன்னும் 4 நாட்களில் கோர்ட்டில் தீர்ப்பும் அறிவிக்கப்பட இருந்தது.
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி அன்று சீமா பானு அயர்லாந்தில் இருந்தபடி வீடியோ கால் மூலம் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் பேசி உள்ளார். குழந்தைகளும் பேசி உள்ளனர். அதன்பிறகு அவர் தனது குடும்பத்தினரிடம் பேசவில்லை. மேலும் அவர் தனது அக்கம்பக்கத்தினரிடமும் பேசவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சீமா பானுவின் வீட்டுக்கு அக்கம்பக்கத்தினர் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு அறையில் சீமா பானு பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மற்றொரு அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு சீமா பானுவின் மகள் அப்ரியா, மகன் பஜான் ஆகியோரும் பிணமாக கிடந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீமா பானு மற்றும் அவருடைய குழந்தைகள் அப்ரியா, பஜான் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது 3 பேரும் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் விவகாரத்தில் சமீரே தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த மைசூருவில் உள்ள சீமா பானுவின் பெற்றோரும் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அயர்லாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தால் சமீர் தான் தங்களது மகள் மற்றும் அவளுடைய குழந்தைகளை கொலை செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
இதுதவிர தங்களது மகள் மற்றும் அவளுடைய குழந்தைகளின் உடல்களை அயர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர பிரதாப் சிம்ஹா எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story