சமயநல்லூர் அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு


சமயநல்லூர் அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2020 10:51 AM IST (Updated: 2 Nov 2020 10:51 AM IST)
t-max-icont-min-icon

சமயநல்லூர் அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி விஜயலட்சுமி(வயது 57). இவர் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்று விட்டு வாடிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் பஸ் நிறுத்தம் முன்பு இரவு 8.30 மணிக்கு வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், விஜயலட்சுமி வந்த மோட்டார் சைக்கிளில் அவரது சேலை சக்கரத்தில் சிக்கியிருப்பதாக கூறினர்.

நகை பறிப்பு

இதைதொடர்ந்து கீழே இறங்கிய விஜயலட்சுமி வண்டியின் சக்கரத்தை பார்த்தபோது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறி அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஒயிலரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story