14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் நடிகர் அமீர்கான் மகள் அதிர்ச்சி தகவல்


14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் நடிகர் அமீர்கான் மகள் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2020 3:18 AM IST (Updated: 3 Nov 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகர் அமீர்கானின் மகள் இரா கான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கும், முன்னாள் மனைவி ரீனா தத்தாவுக்கும் பிறந்த மகள் இரா கான். தற்போது 23 வயதான இவர் தான் 14 வயது இருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். எனக்கு 14 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அவர் எனக்கு தெரிந்தவராகவே இருந்தார். இருப்பினும் அது தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் பிடித்தது.

உணர்ந்துகொண்டதும் உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்து நானே என்னை இந்த பிரச்சினையில் இருந்து வெளியேற்றிக்கொண்டேன்.

இதில் இருந்து வெளியே வந்த பின் பயப்படவில்லை. எனக்கு அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை, முடிந்துவிட்டது என்று நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை. சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டபோது கூட நான் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை. அவர்கள் இணக்கமான முறையிலேயே விவாகரத்து செய்துகொண்டனர். அவர்கள் என்னையும் என் சகோதரனையும் அன்புடன் கவனித்துக்கொண்டனர். எங்கள் குடும்பம் உடைந்துவிடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story