நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு பொது நிதியை ஒதுக்கக்கோரி திருவாரூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு பொது நிதியை ஒதுக்கக்கோரி திருவாரூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2020 6:12 AM IST (Updated: 3 Nov 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு பொதுநிதியை ஒதுக்கக்கோரி திருவாரூரில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை அ.தி.மு.க.வினரும், அரசு அதிகாரிகளும் செயல்படவிடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டியும், உள்ளாட்சிகளில் பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை, உடன் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு உடனடியாக பொது நிதியை ஒதுக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. ஆடலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், தேவா, பாலசந்தர், நகர செயலாளர் பிரகாஷ், மாநில விவசாய தெழிலாளரணி துணை செயலாளர் சங்கர், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணியை சேர்ந்த ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தர்ணா

இதையடுத்து மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளிக்க கலெக்டரை சந்திக்க சென்றனர். அப்போது அங்கு கலெக்டர் இல்லாததால் அவருடைய அலுவலக வாயில் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து மனுவை பெற்று கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story