22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்யக் கோரி திருவையாறில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்யக் கோரி திருவையாறில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2020 6:56 AM IST (Updated: 3 Nov 2020 6:56 AM IST)
t-max-icont-min-icon

22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என திருவையாறில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருவையாறு தேரடி வீதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் துணை தலைவரும், மாநில வக்கீல் பிரிவு செயலாளருமான வேலு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் ஜோதி வரவேற்றார்.

தலைமை நிலைய செயலாளர் ஆர்.மனோகரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

22 சதவீத ஈரப்பதம்

ஆர்ப்பாட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாதக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்க வேண்டும். 22 சதவீத ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள், இடைத்தரகர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்பக உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் சேகர், காமராஜ், அ.ம.மு.க. பேச்சாளர் நல்லதுரை, மாநில வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் ஆம்பல் ராஜமோகன், இணைச் செயலாளர் தங்கப்பன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தஞ்சை குணா, மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் ராஜமன்னார், கோவி.மனோகரன், மதியழகன், சுப்பிரமணியன், பேரூராட்சி செயலாளர்கள் வடிவேல், வரதன் மற்றும் கடலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். திருவையாறு வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story