நெல்லையில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2020 4:16 AM IST (Updated: 4 Nov 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று நெல்லை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று நெல்லை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உதவித்தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முக சுந்தரராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கையை விளக்கி பேசினார். ஓய்வுபெற்ற தபால்காரர்கள் மற்றும் மெயில் கார்டுகளுக்கு பதவி உயர்வு சம்பளம் நிர்ணயம் செய்து நிலுவைத்தொகையினை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒரு சி.ஜி.எச்.எஸ். மருத்துவமனை வேண்டும். இந்த மருத்துவமனை இல்லாத நகரங்களில் சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் கிருஷ்ணன், நிர்வாகிகள் முத்துசாமி, சீதாராமன், கண்ணன், பரமசிவன், ராமசாமி, மாயாண்டி, பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story