அறந்தாங்கியில் வாரச்சந்தை செயல்பட தொடங்கியது ஆடுகளை வாங்க அலைமோதிய கூட்டம்


அறந்தாங்கியில் வாரச்சந்தை செயல்பட தொடங்கியது ஆடுகளை வாங்க அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2020 6:27 AM IST (Updated: 4 Nov 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் வாரச்சந்தை செயல்பட தொடங்கியது. ஆடுகளை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

அறந்தாங்கி, 

புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாரச் சந்தைகள் செயல்பட தொடங்கியது. ஆனால் அறந்தாங்கி வாரச்சந்தை மட்டும் மூடிகிடந்தது. இதனால் விவசாயிகளும், வர்த்தகர்களும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே வாரச்சந்தையை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதை தினத்தந்தி நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து தஞ்சாவூர் சத்திரம் கட்டுபாட்டின் கீழ் செயல்படும் இந்த வாரச்சந்தையை தொடங்குவது என முடிவு செய்து தஞ்சாவூர் சத்திரம் நிர்வாகத்தின் சார்பில் ஒலி பெருகி மூலம் சந்தை செயல்பட உள்ளது என அறிவிப்பு செய்யப்பட்டு நேற்று சந்தை செயல்பட்டது.

ஆடுகளை வாங்க ஆர்வம்

இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினார்கள். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இப்போது, பொதுமக்கள் அதனை வாங்க தொடங்கி விட்டனர்.ஆனால் காய்கறி உள்ளிட்ட பொருட்களை குறைவானவர்களே வாங்கினர். சந்தையில் பொதுமக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கி சென்றனர்.

அறந்தாங்கி வாரச்சந்தை செயல்பாட்டிற்கு வந்ததால் விவசாயிகள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story