மாவட்ட செய்திகள்

போனஸ் குறைத்து அறிவித்ததை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Transport workers protest in Tanjore against the announcement of bonus cuts

போனஸ் குறைத்து அறிவித்ததை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போனஸ் குறைத்து அறிவித்ததை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போனஸ் குறைத்து அறிவித்த தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ பொதுச்செயலாளர் மணிமாறன், அரசு விரைவு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் வெங்கடேசன், செங்குட்டுவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், பொதுச்செயலாளர் கஸ்தூரி, ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் அப்பாதுரை, வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோஷங்கள் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராடி பல ஆண்டுகளாக 20 சதவீத போனஸ் பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 2019-20 ஆம் நிதியாண்டிற்கான போனஸ் தொகை 25 சதவீதமாக வழங்கிட கோரிக்கை வைத்து போராடி வருகிறோம். இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி போனஸ் 10 சதவீதம் ஆக குறைத்து இருப்பது வேதனைக்குரியது. இது தொழிலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது இதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

முடிவில் கிளை தலைவர் எட்வின் பாபு நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில், போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
கரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
2. நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் மறியல் போக்குவரத்து பாதிப்பு
நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. மசினகுடி- மாயார் இடையே சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
மசினகுடி-மாயார் இடையே சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4 மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர்.
4. ராமநாதபுரம் மாவட்டத்தில் அடை மழை: தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் அடைமழையால் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. மீன்சுருட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
மீன்சுருட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.