நாமக்கல்லில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தபால் ஊழியர்களுக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லாமல் சிகிச்சை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் எட்டிக்கவுண்டர் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story