துறையூர், உப்பிலியபுரம் வட்டாரத்தில் மலைவாழ் மக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்


துறையூர், உப்பிலியபுரம் வட்டாரத்தில் மலைவாழ் மக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 5 Nov 2020 6:26 AM IST (Updated: 5 Nov 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

துறையூர், உப்பிலியபுரம் வட்டாரத்தில் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டன.

திருச்சி, 

திருச்சி சரக காவல் துறை, மாவட்ட காவல் துறை, மாவட்ட சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை மற்றும் சைல்டு லைன் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து துறையூர், உப்பிலியபுரம் வட்டாரத்தில் மலைவாழ் மக்களுக்கான பல்வேறு விழிப்புணர்வு முகாமை 3 நாட்கள் நடத்தியது. தென்புற நாடு ஊராட்சி டாப் செங்காட்டுப்பட்டியில் உண்டு உறைவிடமாக மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் பானுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் ஜெகதீஸ்வரி, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம், முசிறி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் என்று பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கினார்கள்.

நலத்திட்ட உதவி

தொடர்ந்து மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு முககவசம், சோப்பு, பிஸ்கட், ஸ்வீட், காரம் வழங்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 50 குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், 17 அங்கன்வாடி மையங்களில் பயிலக்கூடிய குழந்தைகள் அமர்வதற்கும் உறங்குவதற்கும் 34 பாய்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மேலும் கலைக்குழு மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுபோல நச்சிலிப்பட்டி, கருவங்காடு, தண்ணீர் பள்ளம் உள்ளிட்ட கிராமத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Next Story