நாமக்கல்லில் மின்வாரிய பணியாளர்கள் தர்ணா போராட்டம்
நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, போனஸ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு பொறியாளர் சங்கத்தின் ஈரோடு மண்டல செயலாளர் ஆனந்த்பாபு தலைமை தாங்கினார். விஸ்வநாதன் வரவேற்று பேசினார். தொழிற்சங்க நிர்வாகிகள் கந்தசாமி, சித்துசாமி, கோபாலகிருஷ்ணன், சுந்தரராஜன், பன்னீர்செல்வம், காளியண்ணன், பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர்.
உதவி பொறியாளர் நியமனம்
இந்த போராட்டத்தின்போது தமிழ்நாடு மின்வாரிய மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் பங்கஜ்குமார் பன்சால் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச மறுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் அவர் அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தி அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரத்தை வாங்கும் ஏற்பாட்டை செய்து வருவதாகவும், வேலைப்பளு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிதாக தொடங்கப்பட்ட 63 பிரிவு அலுவலகங்களுக்கு உதவி பொறியாளரை நியமிக்க அனுமதி அளிக்காமல் மின்நுகர்வோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருவதாகவும் போராட்டத்தில் பேசிய நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story