இறந்த தாயின் காரிய நிகழ்ச்சியில் அக்காவை அடித்துக்கொன்ற தம்பி கைது - காவேரிப்பாக்கம் அருகே பரபரப்பு
காவேரிப்பாக்கம் அருகே இறந்த தாயின் கா நிகழ்ச்சியில், அக்காவை அடித்துக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்,
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 50). இவர் தனது மகளை, உடன்பிறந்த தம்பியான ஜோதிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ஜோதியின் தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு காரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அக்கம் பக்கத்தினரை வரவழைத்து இறந்தவருக்கு பூஜை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஜோதி குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் எனக்கு பசிக்கிறது உடனே சாப்பாடு போடு எனவும் அக்காள் சாந்தியிடம் கேட்டுள்ளார்.
இதற்கு சாந்தி அம்மாவின் காரிய நாளில் கூட மதுபோதையில் வந்துள்ளாயே எனக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஜோதி என் வீட்டிற்கு வந்து என்னையே கேள்வி கேட்கிறாயா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் சாந்தியின் தலைமுடியை பிடித்து மார்பின் மீது உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சாந்தியை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதியை கைது செய்தனர்.

Related Tags :
Next Story