கரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்,
கரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். புகழேந்தி, பிரேம்குமார், அறிவுச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டி.என்.ஜி.இ.ஏ. மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாவட்ட பொருளாளர் ஞானபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாகவுள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மருந்தாளுனர் பணி நேரம் 9-4 பணிக்காக 82-யினை நடைமுறை படுத்த வேண்டும். எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களை பணிவரன் முறை செய்திட வேண்டும். தமிழ்நாடு மருத்துவ சேவை பணிகள் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 32 மாவட்ட மருந்து கிடங்குகளில் மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story