சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று சாலை போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, 

புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை வழங்கக்கோரி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று சாலை போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன பத்மநாபன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் சொக்கலிங்கம், கோவிந்தராஜ், அன்பழகன், மோகன்தாஸ், ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story