கட்டில், பீரோவுடன் பட்டதாரி பெண் நூதன போராட்டம் கோர்ட்டு முன் அமர்ந்ததால் பரபரப்பு


கட்டில், பீரோவுடன் பட்டதாரி பெண் நூதன போராட்டம் கோர்ட்டு முன் அமர்ந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Nov 2020 9:24 AM IST (Updated: 6 Nov 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு முன்பு கட்டில், பீரோவுடன் அமர்ந்து பட்டதாரி பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேர்தெரியாதான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி எழில்மலர் (வயது 40). பி.எஸ்சி. பட்டதாரி. இவருக்கும் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அரசு கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இந்தநிலையில் கணவன் வீட்டில் இருந்து வரதட்சணையாக ரூ.2½ லட்சம் கேட்டு அவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையொட்டி அந்த பெண்ணை அவரது கணவர் தாய் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார். திரும்ப அழைத்துச் செல்ல வராததால் அந்த பெண் கணவருடன் சேர்ந்து வாழ இருப்பிட ஆணை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் அவரது கணவர் புதுவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விவகாரத்து கிடைத்த நிலையில் அவர் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டாராம்.

நூதன போராட்டம்

இதுபற்றி தெரியவந்ததையடுத்து எழில்மலர் தனக்கு வாழ வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரி தனது பெற்றோர் வீட்டில் இருந்து கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை எடுத்து வந்து கோர்ட்டு முன்பு வைத்து திடீரென நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் வினோதமாக பார்த்துச் சென்றனர். இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.


Next Story