கருகும் பயிர்களை காப்பாற்றக்கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் கோட்டூர் அருகே நடந்தது


கருகும் பயிர்களை காப்பாற்றக்கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் கோட்டூர் அருகே நடந்தது
x
தினத்தந்தி 6 Nov 2020 10:27 AM IST (Updated: 6 Nov 2020 10:27 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே கருகும் பயிர்களை காப்பாற்றக்கோரி விவசாயிகள் வயலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோட்டூர், 

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்ய கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனையொட்டி விவசாயிகள் சம்பா சாகுபடியான நேரடி நெல் விதைப்பு தெளித்தும், நடவு பணி செய்தும் ஆங்காங்கே களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்திற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டும் இதுவரையில் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பயிர்கள் கருகி வருகிறது

கோட்டூர் அருகே உள்ள பைங்காட்டூர், வாலிவோடை, கடைத்தெரு, மேலபுத்தூர் உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் கருகி வருகிறது. இதனால் உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் வயலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

Next Story