12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 6 Nov 2020 10:34 AM IST (Updated: 6 Nov 2020 10:34 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈட்டனர்.

நாகப்பட்டினம், 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அரசு செவிலியர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வைத்தார். மாநில செயலாளர் ராமநாத கணேசன், அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயலாளர் அன்பழகன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

காலியாக உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஆணை 82-ன்படி பணி நேரம் அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் பணியை வரன்முறை படுத்த வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பணி நியமனம் வேண்டும்.

ரூ.2 லட்சம்

பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசு அறிவித்தபடி கொரோ னா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தோருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

Next Story