நேரப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் பஸ் உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை
அடிமாலியில் நேரப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பஸ் உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து மற்றொரு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மூணாறு,
இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் ஜார்ஜ் அப்பன்(வயது 37). இவர் சொந்தமாக பஸ் வைத்து அதை ஓட்டி வந்தார். இவரது பஸ் அடிமாலியில் இருந்து மாலை 5 மணிக்கு சேனாதிபதிக்கு புறப்படும். அடிமாலியை சேர்ந்தவர் மணிஷ் மோகன் (38). இவர் மற்றொரு தனியார் பஸ்சில் டிரைவராக உள்ளார். இவர் ஓட்டி வந்த பஸ் அடிமாலியில் இருந்து மாலை 5.05 மணிக்கு சேனாதிபதிக்கு புறப்படும். பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஜார்ஜ் அப்பனுக்கும், மணிஷ் மோகனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அடிமாலி பஸ் நிலையத்தில் இருந்து சேனாதிபதிக்கு ஜார்ஜ்அப்பனின் பஸ் 5 மணிக்கு புறப்படாமல் 5 மணி 5 நிமிடத்தை தாண்டியும் பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை மணிஷ்மோகன் தட்டிக்கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜார்ஜ் அப்பனுக்கும், மணிஷ் மோகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது மணிஷ்மோகன் ஆத்திரம் அடைந்து தான் வைத்திருந்த கத்தியால் ஜார்ஜ் அப்பனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஜார்ஜ் அப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அடிமாலி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜார்ஜ் அப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அடிமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிஷ் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அடிமாலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story