கஞ்சா வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து: மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி - சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கஞ்சா வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, குடும்பத்தினருடன் மாற்றுத்திறனாளி பெண் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை தாதம்பட்டி காலனியை சேர்ந்தவர் வேலப்பன். இவருடைய மனைவி தெய்வானை (வயது 55). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை தனது மூத்த மருமகள் மாலா மற்றும் அவரது 2 குழந்தைகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு வந்தவுடன் தெய்வானை தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தெய்வானை மற்றும் அவரது குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கி தடுத்தனர். அப்போது அவர் தனது இளைய மகன் வேலுமணி மீது வீராணம் போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாகவும், எனவே அவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.
இதையடுத்து அவரை போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர். இருந்தபோதிலும் மாற்றுத்திறனாளி பெண் தெய்வானை தரையில் அமர்ந்து கண்ணீர் மல்க தனது மகனை விடுவிக்க வேண்டுமென கூறி தரையில் உருண்டு புரண்டு தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தெய்வானை கண்ணீர் மல்க கூறும் போது, ‘எனது இளைய மகன் வேலுமணியை கஞ்சா விற்றதாக பொய் வழக்கில் வீராணம் போலீசார் கைது செய்துள்ளனர். என் மகன் கஞ்சா விற்றது கிடையாது. கட்டிட வேலைக்கு சென்று வருகிறான். ஆனால் வீராணம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து எனது மகனை கைது செய்தது கண்டனத்துக்குரியது. எனது மகனை விடுவிக்கவில்லை என்றால் இங்கேயே தீக்குளித்து சாவேன்’ என்றார். பொய் வழக்கில் மகனை போலீசார் கைது செய்துள்ளதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story