ஆட்டோ டிரைவர் தற்கொலை: தனியார் வங்கியை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டம் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு

தேனி,
தேனியில் ஆட்டோ டிரைவர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் தனியார் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 49). ஆட்டோ டிரைவர். இவர் கார் வாங்குவதற்காக தேனியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். கொரோனா ஊரடங்கால் கடனுக்கான தவணைத் தொகையை சரியாக செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நேற்று முன்தினம் தேனி வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடனை செலுத்தக்கோரி வங்கி அதிகாரிகள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொந்தரவு செய்ததால் அவர் தற்கொலை செய்துள்ளதாக அவருடைய மனைவி பவுன்தாய் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உடலை வாங்க முருகனின் உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இதற்கிடையே முருகன் தற்கொலை செய்யும் முன்பு தனது மகளுக்கு தொலைபேசியில் பேசி, வங்கி அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக கூறியதாக ஒரு செல்போன் உரையாடலையும் போலீசாரிடம் உறவினர்கள் வழங்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனியில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் வங்கியை முருகனின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், செங்கதிர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டு, வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டனர். இருப்பினும், 3-வது நாளாக நேற்றும் முருகனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story