பேரளம் அருகே அம்மா நகரும் நியாய விலைக்கடை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
பேரளம் அருகே அம்மா நகரும் நியாயவிலைக்கடையை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
நன்னிலம்,
பேரளம் அருகே உள்ள பில்லூர் ஊராட்சியில் அம்மா நகரும் நியாயவிலைக்கடையை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு நியாய விலைக்கடைகள் சில இடங்களில் தூரமாக உள்ளதால் பொதுமக்கள் சென்று ரேசன் பொருள் வாங்க சிரமமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து தமிழகம் முழுவதும் நகரும் நியாயவிலைக்கடை திறக்க உத்தரவிட்டு முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்.நேற்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் போழக்குடி ஊராட்சி திருமெங்ஞானம், பில்லூர் ஊராட்சி கொல்லுமாங்குடி இஸ்லாமியர் தெரு, பாவட்டகுடி ஊராட்சி இஸ்லாமியர் தெரு, உள்பட 15 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி உள்ளோம்.
எளிதாக பெறலாம்
இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் வே. சாந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், முன்னாள் எம்.பி. கோபால், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவரும் ஒன்றியக்குழு துணைத் தலைவருமான சி.பி.ஜி. அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், ஒன்றிய செயலாளர் ராமகுணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர் செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன்,கூட்டுறவு சங்கத் தலைவர் புகழேந்தி, கடுவங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பில்லூர் ஊராட்சி தலைவர் பிரகாஷ், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story