ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வன அதிகாரி கைது


ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வன அதிகாரி கைது
x
தினத்தந்தி 10 Nov 2020 12:29 AM IST (Updated: 10 Nov 2020 12:29 AM IST)
t-max-icont-min-icon

வசாயில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரி, ஊழியர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

வசாயில் உள்ள துங்கரேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தில் அதிகாரியாக இருப்பவர் திலிப் தோன்டே. இவர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த யோசனையின்படி நேற்று அந்த நபர் வசாயில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் திலிப் தோன்டேயை சந்தித்து ரூ.2 லட்சத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வனத்துறை அதிகாரியை கையும் களவுமாக பிடித்தனர்.

அதிகாரி, ஊழியர் கைது

மேலும் அவருக்கு உதவியாக இருந்த வனத்துறை அலுவலக ஊழியர் ஆனந்த் சோனவானேயும் சிக்கினார். 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தானேயில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Next Story