டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் சாவு


டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் சாவு
x

டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் சாவு பணியில் சேர்ந்த 2 மாதத்தில் பரிதாபம்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் கிராம நிர்வாக அலுவலர் நவநீதன்(வயது 25). இவர் நேற்று அருளம்பாடியில் இருந்து மணலூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து நவநீதனை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த நவநீதனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் அவர் மணலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். ஆனால் அதற்குள் நவநீதன் விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story