பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடுவது ‘கல்லறையில் கேக் வெட்டுவது போன்றது’ சிவசேனா கடும் தாக்கு


பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடுவது ‘கல்லறையில் கேக் வெட்டுவது போன்றது’ சிவசேனா கடும் தாக்கு
x
தினத்தந்தி 10 Nov 2020 8:14 PM GMT (Updated: 10 Nov 2020 8:14 PM GMT)

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடுவது, அதனால் இறந்தவர்களின் கல்லறையில் கேக் வெட்டுவது போன்றது என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கருப்பு பணம் குறைந்து இருப்பதாக கூறினார்.

இந்தநிலையில் சிவசேனா பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்தியாவின் கருப்பு அத்தியாயம் என கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து அக்கட்சியின் சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கல்லறையில் கேக்

பலரின் சாவுக்கு காரணமாக இருந்ததால் அந்த முடிவை (பணமதிப்பிழப்பு நடவடிக்கை) கொண்டாடுவது, அதனால் இறந்தவர்களின் கல்லறையில் பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்றது. பணமதிழப்பு நடவடிக்கையால் வேலை இழக்கப்பட்டது. தற்கொலைகள் நிகழ்ந்தன. வியாபாரிகள், தொழில்துறையினர் அழிந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல பீகார் தேர்தலையொட்டி பா.ஜனதா ராமர் கோவில் கட்டும் விவகாரம், சுஷாந்த் சிங் மரண பிரச்சினையை எழுப்பியது. ஆனால் அது மக்களை சென்றடையவில்லை எனவும் சிவசேனா கூறியுள்ளது.

Next Story