திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பட்டாசு வெடித்த பா.ஜ.க.வினருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்


திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பட்டாசு வெடித்த பா.ஜ.க.வினருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 Nov 2020 2:33 AM IST (Updated: 11 Nov 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பட்டாசு வெடித்த பா.ஜ.க.வினருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்.

வானூர், 

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ - 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டத்தில், காணொலி வாயிலாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தலைமை தாங்கி பேசினார்.இதற்காக திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் இரவு 7 மணி அளவில் வானூர் ஒன்றிய செயலாளர் முரளி தலைமையில் தி.மு.க.வினர் கூடினர். அங்கு மு.க.ஸ்டாலின் பேச்சை தி.மு.க.வினர் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் பீகார் தேர்தலில் பா.ஜ.க.முன்னணி பெற்றதை கொண்டாடும் வகையில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பட்டாசு சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால் மு.க.ஸ்டாலின் பேச்சை கேட்க முடியாமல் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பா.ஜ.கவினரை சற்று தள்ளி சென்று பட்டாசு வெடிக்குமாறு கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரோவில் போலீசார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story