நேரு வீதியில் கூடுதல் டி.ஜி.பி. திடீர் ரோந்து
புதுச்சேரி நேரு வீதியில் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன் திடீர் ரோந்து மேற்கொண்டார்.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் புதுவை கடை வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, மிஷன்வீதி ஆகிய இடங்களில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன் நேற்று இரவு நேரு வீதியில் ரோந்து சென்றார். அங்கு பணியில் இருந்த பெரியகடை போலீசாரிடம், “தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் நகை, பணம், பொருட்கள் மற்றும் செல்போன்களை திருடி கைவரிசை காட்ட வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருந்து திருட்டு கும்பல் குறித்து கண்காணிக்க வேண்டும். இதுபற்றி பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றித் திரிந்தால் உடனடியாக அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
விழிப்புணர்வு
பின்னர் நேரு வீதியில் பெரியகடை போலீஸ் நிலையத்தில் இருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரை நடந்து சென்று அவர் பார்வை யிட்டார். அந்த வழியாக பொதுமக்களிடம், ‘பண்டிகை நேரம் கவனமாக இருக்க வேண்டும். சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்’ என்று விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த ஆய்வின் போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா, ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், முருகவேல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story