தீபாவளி போனஸ் வழங்கக்கோரி நள்ளிரவு வரை நீடித்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்


தீபாவளி போனஸ் வழங்கக்கோரி நள்ளிரவு வரை நீடித்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2020 8:04 PM GMT (Updated: 11 Nov 2020 8:04 PM GMT)

அங்கன்வாடி ஊழியர்கள் நிலுவையில் உள்ள 2 ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, 

புதுவை சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் இயக்குனர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நிலுவையில் உள்ள 2 ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.

இதில் செயலாளர் தாட்சாயிணி, பொருளாளர் முருகவேணி, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் பாலமோகனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்று நள்ளிரவு வரை இந்த போராட்டம் நீடித்தது.

Next Story
  • chat