ஜெயங்கொண்டத்தில் 7 மாதங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர் திறப்பு


ஜெயங்கொண்டத்தில் 7 மாதங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர் திறப்பு
x
தினத்தந்தி 12 Nov 2020 3:15 AM IST (Updated: 12 Nov 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று ஒருசினிமா தியேட்டர் திறக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 2 தியேட்டர்கள் உள்ளன. இதில் ஒரு தியேட்டர்நேற்று திறக்கப்பட்டது.

இங்கு காலை 10 மணி காட்சி நடைபெற்றது. பார்வையாளர்கள் தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு தியேட்டர் நிர்வாகிகள் முககவசம் அணிய செய்து, கைகளுக்கு கிருமிநாசினி கொடுத்து உள்ளே அமர வைத்திருந்தனர். மேலும் தியேட்டர் முன்புறம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முககவசம் அணிவது உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

மேலும் மற்றொரு தியேட்டர் தீபாவளியன்று திறக்கப்படுகிறது.

தியேட்டருக்கு குறைந்த அளவே பார்வையாளர்கள் வந்து இருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக 7 மாதங்களுக்குப் பிறகு ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டர் திறக்கப்பட்டு காட்சிகள் நடைபெற்றதால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story