முன்னாள் எம்.எல்.ஏ. நினைவு நாளையொட்டி தர்மபுரியில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் - மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வழங்கினார்


முன்னாள் எம்.எல்.ஏ. நினைவு நாளையொட்டி தர்மபுரியில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் - மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வழங்கினார்
x
தினத்தந்தி 12 Nov 2020 3:37 PM GMT (Updated: 12 Nov 2020 3:37 PM GMT)

தர்மபுரி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.அரங்கநாதன் நினைவு நாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வழங்கினார்.

தர்மபுரி, 

தர்மபுரி நகர் மன்ற முன்னாள் தலைவரும், முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளரும், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.ஆர்.வெற்றிவேல் தந்தையும், தர்மபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் துணை செயலாளருமான எஸ்.அரங்கநாதனின் 28-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தர்மபுரி மதிகோன்பாளையம் எஸ்.ஆர்.ரைஸ் மில் வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர். குருப்ஸ் மற்றும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் தலைமையில் ஏராளமானோர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.அரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அறக்கட்டளை செயலாளர் மரகதம் வெற்றிவேல், டாக்டர் வி.ரேணுகாதேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். தொழில் அதிபர் பி.அண்ணாதுரை, ஆசிரியர் எஸ்.ஏ.சின்னசாமி, அறக்கட்டளை இயக்குனர் எஸ்.ஆர்.சக்திவேல், என்ஜினீயர் வி.நிரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து ஏழை, எளிய, முதியோர்களுக்கு உதவித்தொகை, இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை எஸ்.ஆர்.வெற்றிவேல் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் என்.பி.பெரியண்ணன், ஜி.மதிவாணன், தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் சின்.அருள்சாமி, அமைப்புசாரா கட்டுமான பிரிவு மாநில செயலாளர் சிங்கராயன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கொளந்தைசாமி, போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், முன்னாள் செயலாளர் பரமசிவம், கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பி.சின்னசாமி, பிளாஸ்டிக் கடை உரிமையாளர் காளியப்பன், திருச்சி ஸ்டீல்ஸ் உரிமையாளர் சேட் முகமது, அண்ணா பொது தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜம்புலிங்கம், நெல் அரவை முகவர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர ஜெயலலிதா பேரவை பொருளாளர் என்.மாது மற்றும் எஸ்.ஆர். குரூப்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story