செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 13 Nov 2020 4:53 AM IST (Updated: 13 Nov 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் பலராமன், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் சந்தானகிருஷ்ணன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் கலந்துகொண்டு 1,250 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் 14 ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை காவலர்கள் பட்டாசு, இனிப்பு, குடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் துளசிங்கம், ஜெ. கே.அன்சாரி, பாசறை ஒன்றிய செயலாளர் சுதேஷ் ஆனந்த், நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story