தூத்துக்குடியில் தொழிலக பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை


தூத்துக்குடியில் தொழிலக பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை
x
தினத்தந்தி 13 Nov 2020 5:59 AM IST (Updated: 13 Nov 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிலக பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.64 ஆயிரம் மற்றும் இனிப்பு, பட்டாசு பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 4-வது தெருவில் தூத்துக்குடி மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்துக்கு நேற்று மாலையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மேக்லின் எஸ்கால் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் திடீரென சென்றனர். உடனடியாக அலுவலகத்தை மூடினர். அங்கு இருந்து யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

பறிமுதல்

அப்போது, அங்கு கணக்கில் காட்டப்படாமல் ரூ.64 ஆயிரத்து 800 மற்றும் இனிப்பு, பட்டாசு பார்சல்கள் இருந்தன. அதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story