வாணியம்பாடி, ஆலங்காயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் - 16-ந் தேதி நடக்கிறது
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 16-ந் தேதி வாணியம்பாடி தாலுகா அலுவலகம் மற்றும் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், வாக்காளர் அடையாள அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story