கர்நாடகத்தில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
கர்நாடகத்தில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதிப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம் என்று அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில், தீபாவளி பண்டிகையின்போது, அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது நீதிபதிகள், பசுமை பட்டாசு என்றால் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வக்கீல், “சி.எஸ்.ஐ.ஆர்., என்.இ.இ.ஆர்.ஐ., பி.இ.எஸ்.ஒ. ஆகிய நிறுவனங்களின் பசுமை முத்திரை மற்றும் கியூ.ஆர். (கியூக் ரெஸ்பான்சு) கோடு ஆகியவை இருந்தால் அது பசுமை பட்டாசுகளாக கருதப்படுகிறது. இது தான் பசுமை பட்டாசுகளின் அடையாளம்“ என்று கூறினார்.
அறிக்கை தாக்கல்
அப்போது நீதிபதிகள், “பசுமை முத்திரை உள்ள பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த வகையான பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கண்காணிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையின்போது, பசுமை பட்டாசு மட்டுமே பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story