இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம்


இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2020 10:58 PM IST (Updated: 15 Nov 2020 10:58 PM IST)
t-max-icont-min-icon

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில், 

கருங்கல் அருகே திப்பிரமலை பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயன், பச்சை தமிழகம் கட்சி தென்மண்டல தலைவர் சங்கரபாண்டியன், அம்பேத்கர் திராவிட மக்கள் இயக்க மாவட்ட தலைவர் அண்ணாத்துரை, மக்கள் ஜனநாயக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது ரசூல், கம்யூனிஸ்டு ஒர்க்கர்ஸ் பார்ட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகிழ்ச்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story