தென்காசி புதிய கலெக்டராக சமீரன் பொறுப்பு ஏற்பு
தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக கீ.சு.சமீரன் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. தென்காசியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவானது. இதன் முதல் கலெக்டராக அருண் சுந்தர் தயாளன் பணியாற்றி வந்தார். அவர் தற்போது வனத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக மீன்வளத்துறை இயக்குனராக இருந்த டாக்டர் கீ.சு.சமீரன், தென்காசி மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று பிற்பகல் தென்காசியில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ். படித்து 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
ராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மீன்வளத்துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். தற்போது தென்காசி மாவட்டத்தில் 2-வது கலெக்டராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
Related Tags :
Next Story