கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் உதவி கலெக்டர் விஜயா வெளியிட்டார்


கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் உதவி கலெக்டர் விஜயா வெளியிட்டார்
x
தினத்தந்தி 17 Nov 2020 5:50 AM IST (Updated: 17 Nov 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று உதவி கலெக்டர் விஜயா வெளியிட்டார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில், உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் முருகானந்தம், தாசில்தார்கள் மணிகண்டன், பாஸ்கரன், முத்து, அய்யப்பன், ரகுபதி, தேர்தல் துணைதாசில்தார் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதிய வாக்காளர்கள்

கடந்த பிப்ரவரி 14-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 7 லட்சத்து 11 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். விளாத்திகுளம் தொகுதியில், தொகுதி மாறி வந்தவர்கள், புதிதாக சேர்ந்தவர்கள் என 307 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல், தொகுதி மாறிச்சென்றவர்கள், இறந்தவர்கள் என 2ஆயிரத்து 558 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய வாக்காளர்கள் 655 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பட்டியலில் இருந்து 589 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் 508 பேர் புதிய வாக்காளர்கள். பட்டியலில் இருந்து 2ஆயிரத்து 142 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் விவரம்

விளாத்திகுளம் தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 592 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து7 ஆயிரத்து 261 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தர் 3 பேர் உள்ளிட்ட 2 லட்சத்து 10ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1 லட்சத்து 18ஆயிரத்து 969 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 23ஆயிரத்து 532, மூன்றாம் பாலினத்தர் 25பேரும், ஆக மொத்தமாக 2லட்சத்து 42 ஆயிரத்து 526 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கோவில்பட்டி தொகுதியில் 1லட்சத்து 26ஆயிரத்து 487 ஆண் வாக்காளர்களும், 1லட்ச்து 31ஆயிரத்து 658பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தர் 28 பேரும், ஆக மொத்தமாக 2லட்சத்து 58ஆயிரத்து 173வாக்காளர்களும் உள்ளனர். இந்த 3 தொகுதிகளிலும் 3 லட்சத்து 49 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 3லட்சத்து 62 ஆயிரத்து 451 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தர் 56 பேரும், மொத்தமாக 7 லட்சத்து 11 ஆயிரத்து 555 வாக்காளர்களும் உள்ளனர்.

Next Story