கோவில்பட்டி அருகே கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் அடிப்படை வசதி செய்து தரக்கோரிக்கை


கோவில்பட்டி அருகே கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் அடிப்படை வசதி செய்து தரக்கோரிக்கை
x

கோவில்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தெருவில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகேயுள்ள பழைய அப்பனேரி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள இந்திராகாலனி 36 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். கழிவு நீர் செல்ல வழியில்லை, பழுதடைந்த மின்கம்பங்கள், சேதமடைந்த குடிநீர் தேக்க தொட்டி, சரியான சாலை வசதி என எவ்வித வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாற்று நடும் போராட்டம்

இந்நிலையில் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக போதிய வாறுகால் வசதி இல்லாத காரணத்தினால் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்கு புகுந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

மேலும் தெருக்களில் ஆங்காங்கே மழைநீர் குட்டை போன்று தேங்கி இருப்பதாகவும், இதனால் தொற்று நோய் ஏற்பாடும் அபாயம் இருப்பதாகவும், போதிய வசதிகளை செய்து தர வேண்டும், தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்றுக்களை நட்டி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story