பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமாருக்கு தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து
பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட நிதிஷ்குமாருக்கு, தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
மும்பை,
பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜனதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட அதிக இடங்களை கைப்பற்றியது. எனினும் முதல்-மந்திரி பதவியை அவருக்கு விட்டு கொடுத்தது. இதில் நேற்று முன்தினம் பீகார் முதல்-மந்திரியாக தொடர்ந்து 4-வது முறையாக நிதிஷ் குமார் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் பா.ஜனதாவை சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியார் துணை முதல்-மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
பட்னாவிஸ் வாழ்த்து
இந்தநிலையில் பீகார் சட்டசபை தேர்தலில், பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-
பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள். மேலும் துணை முதல்-மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்ட தர்கிஷோர் பிரசாத், ரோணு தேவி ஆகியோருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கும், உங்கள் ஒட்டுமொத்த அணிக்கும் ஆட்சிகாலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story