விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2020 8:00 AM IST (Updated: 20 Nov 2020 8:00 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர், விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

உத்திரமேரூர், 

உத்திரமேரூர் ஒன்றியம் சடச்சவாக்கம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 71). விவசாயி. இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்றும் எந்தவித பலனும் இல்லாததால் மனமுடைந்த நிலையில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story