மும்பை போலீசார் விசாரணை நடத்தி வரும் டி.வி. சேனல்கள் மோசடி குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
மும்பை போலீசார் விசாரணை நடத்தி வரும் டி.வி. சேனல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடி குறித்து அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
டி.ஆர்.பி. ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெறுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாக பிரபல ரிபப்ளிக் ஆங்கில சேனல் மற்றும் மராத்தி சேனல்களான பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா உள்ளிட்டவைகள் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதை தடுக்க மாநில அரசு சி.பி.ஐ.க்கு அளித்து இருந்த பொது ஒப்புதலையும் வாபஸ் பெற்று இருந்தது.
அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
இந்தநிலையில் டி.ஆர்.பி. மோசடி தொடர்பாக மும்பை போலீசார் பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். டி.ஆர்.பி. மோசடி நடந்து இருந்தால் அந்த மோசடியை வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.
இதுகுறித்து டி.ஆர்.பி. மோசடி புகாரில் சிக்கிய டி.வி. சேனல் ஊழியர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது. இதற்காக புகாரில் சிக்கியவர்கள் தங்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய சம்மன் அனுப்பப்படும் என அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story