அரசு துறைகள் புகார் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


அரசு துறைகள் புகார் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Nov 2020 4:49 AM IST (Updated: 21 Nov 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

அரசுத் துறைகள் புகார் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவையில் பொதுப் பிரச்சினைகள் சாதாரண நிலையில் இருக்கும்போதே தீர்வு காணப்படாததால் பெரும் சேதம் ஏற்படுகிறது. அலட்சியத்தாலோ, அறியாமல் இருப்பதாலோ இது ஏற்படுகிறது. உயரமான மரக்கிளைகளை மழைக்காலத்துக்கு முன்பே சரிசெய்யவேண்டும்.

இதுபோன்ற பணிகளுக்கு தீயணைப்புத் துறையிடம் உயரமான ஏணிகள் உள்ளன. ஆனால் அவற்றை தேவையான துறையினர் நாடுவதில்லை. இதனால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது.

புகார் பதிவேடு

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை கேட்டு வருகிறது. சிறப்பான சேவையை வழங்குவதற்காக மேற்பார்வை செய்ய வேண்டியது குறித்து அறிவுறுத்துகிறோம். அடிப்படை பிரச்சினை தொடர்பான விவரங்களை புகார் பதிவேடுகளில் சேர்க்க குறிப்பிட்டுள்ளேன். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்த புகார் பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.

கூடுதல் முயற்சியுடன் குறைகளுக்கு தீர்வுகாண நல்ல வேலையை செய்ய அதிகாரிகள் நேரில் அழைக்கப்பட்டு பாராட்டப்படுவர். அவர்களுக்கு அங்கீகாரம் தரப்படுவதால் அவருடன் பணிபுரிவோருக்கும் ஊக்கம் கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story