மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் அருகே 300 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு + "||" + Theft of 300 kg of small onions near Perambalur

பெரம்பலூர் அருகே 300 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

பெரம்பலூர் அருகே 300 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு
பெரம்பலூர் அருகே 300 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பாடாலூர், 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 65). இவர் அப்பகுதியில் ஆலத்தூர்கேட் செல்லும் சாலையில் முத்தையா கோவில் அருகே உள்ள தனது வயலில் நடவு பணிக்காக பட்டறை அமைத்து, சுத்தம் செய்த 300 கிலோ எடை கொண்ட 5 மூட்டை விதை வெங்காயத்தை வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வெங்காய மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

போலீசார் விசாரணை

நேற்று காலை வயலுக்கு சென்ற கணேசன், வெங்காய மூட்டைகள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கோட்டைப்பட்டினத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. திருச்செங்கோட்டில் துணிகரம்: பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு
திருச்செங்கோட்டில் துணிகரம்: பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
3. 42 ஆண்டுகளுக்கு பின்னர் லண்டனில் மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள், அனந்தமங்கலம் கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை
திருட்டு போய் 42 ஆண்டுகளுக்கு பின்னர் லண்டனில் மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள் அனந்தமங்கலம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
4. பெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் 650 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு
பெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த 650 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
5. தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
தூத்துக்குடி அருகே, போலீசாரின் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து திருட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.