கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
கரூர்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்துள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடந்தது.
இன்றும்...
முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் நிறைய பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் உள்ளிட்டவைக்கும் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர்.
முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவிபுரிந்தனர். விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (டிசம்பர்) 12, 13-ந் தேதிகளிலும் நடக்கிறது.
Related Tags :
Next Story