மாவட்ட செய்திகள்

ராமேசுவரம் கடற்கரையில் வாலிபர் குத்திக்கொலை தப்பிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை + "||" + Search hunt to catch gang who escaped youth stabbing at Rameswaram beach

ராமேசுவரம் கடற்கரையில் வாலிபர் குத்திக்கொலை தப்பிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை

ராமேசுவரம் கடற்கரையில் வாலிபர் குத்திக்கொலை தப்பிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை
ராமேசுவரம் கடற்கரையில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட் டார். இதில் தொடர்புடைய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
ராமேசுவரம், 

ராமேசுவரம் அந்தோணியார் கோவில் கடற்கரை அருகே நேற்று கத்திக்குத்து காயங்களுடன் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து அறிந்ததும் துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கடற்கரையில் அந்த நபர் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார், என்பது குறித்து அறிய போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர், ராமேசுவரம் சந்தன மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அமீர்கான் மகன் மனோஜ் (வயது 23) என்பது தெரியவந்தது.

காரணம் என்ன?

கடற்கரையில் அவரை ஒரு கும்பலாக வந்து கத்தியால் குத்திவிட்டு தப்பினார்களா, அல்லது ஒருவர்தான் இந்த செயலில் ஈடுபட்டாரா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் ராமேசுவரம் உதவி சூப்பிரண்டு தீபக் சிவாஜ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கடற்கரையில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. வாழப்பாடி அருகே ஆண் பிணம்: குடிபோதையில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை சிறுவன் உள்பட 2 பேர் கைது
வாழப்பாடி அருகே குடிபோதையில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சேலத்தில் பயங்கரம் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
சேலத்தில், ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. கொடுத்த நகையை திருப்பி கேட்ட நண்பனை கொலை செய்த வாலிபர் கைது
உல்லாஸ்நகரில் கொடுத்த நகையை திருப்பி கேட்ட நண்பனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
4. வங்காளதேச கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
கொல்கத்தாவில் பூஜையில் கலந்து கொண்டதாக சர்ச்சை: வங்காளதேச கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.
5. கொளத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை
கொளத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.